இயல்பின் மொழி!

இங்கே இரண்டு மொழி இருக்கிறது.

ஒன்று நம்முடன் நாம் பேசிக்கொள்ளும் மொழி. அந்த மொழி தான் நம்மை நமக்குப் புரிய வைக்கும் மொழி.

மற்றொன்று நாம் பொது சமூகத்திற்குப் புரிவதற்காக ஏற்படுத்திக்கொண்ட மொழி.

இரண்டாவது மொழியில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் இரக்கமாகப் பேசுவது பொது மனிதர்களுக்குப் பலவீனமாகத் தெரியலாம். நாம் துடிப்பாகப் பேசுவது அந்த மனிதர்களுக்குத் தலைகால் புரியாமல் பேசுவதாகத் தெரியலாம். தயவாகப் பேசுவது அற்பமாகத் தெரியலாம். நம்முடைய இயல்பே கூட இயல்புக்கு மாறாய் தெரியலாம். ஆனால் அதனால் அவரவர்க்குப் புரியும் மொழியில் பேச அதிகம் முனைந்தால் நாம் அவர்களாகி விடுவோம். பொது சமூகப் புத்தியில் சறுக்கி விழுந்திடுவோம்.

அதற்கு ஒரு வகையில் கிறுக்கனாகவே இருந்துவிடலாம்.

I have found both freedom and safety in my madness; the freedom of loneliness and the safety from being understood, for those who understand us enslave something in us.

-Khalil Gibran, The Madman 1918

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply