கதைக்குள் மூழ்குவதற்கு முன்…
கொஞ்சம் பேசிவிடுவோம்!

ஜனவரி 21, 2021 அன்று ‘ஒப்பம்’ நாவலை முழுவதுமாக எழுதி முடித்தேன். ஆகஸ்ட் இறுதியில் எழுதத் தொடங்கி, தொடர்ந்து ஐந்து மாதங்கள் இந்த நாவல் எழுதுவதைத் தவிர்த்து வேறெந்த வேலையுமே நான் பார்க்கவில்லை. அணுநேரமும், கதைப் பற்றிய சிந்தனை, கதைக்குள் வரும் நிகழ்வுகள் பற்றிய சிந்தனைகள் மட்டுமே நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தது. அலைபேசியில் அவ்வப்போது நண்பர்களோடு உரையாடுவேன். அந்த உரையாடலும் இந்த நாவலைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். அப்படி இராப்பகலாக பெரும் ஆர்வத்தோடும் சிரத்தையோடும் எழுதி முடித்த நாவலை பல காரணங்களுக்காக நான் உடனே வெளியிடவில்லை. செப்டம்பர் 19, 2022 அன்று அமேசான் கிண்டில் மின்னூலாக வெளியானது. 

சரி, ‘ஒப்பம்’ நாவல் எதைப் பற்றியது?

புதிதாக பணிக்கு வந்த ஒரு கிராம அஞ்சல் அலுவலர், தன் அலுவலக  ஜன்னல்வழி தினம் காணும் கிராமத்தின் காட்சிகள்… அந்த காட்சிகள் எழுப்பும் உணர்வுகள்… அந்த உணர்வுகள் தூண்டும் சிந்தனைகள்… அலுவலக மேசையில் அமரும்போது எழும் தார்மீகக் கேள்விகள்… கனவுகளுக்கு வாழ்வில் இருக்கும் இடம்… இதற்கிடையில் அம்மா, காதலி என்று உறவுகள்…  இப்படி யதார்த்தமான நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் கொண்டிருக்கும் ஒரு யதார்த்த வகை நாவல்தான் ‘ஒப்பம்’.   

‘ஒப்பம்’ நாவலின் கதாபாத்திரங்கள் மிக எளிமையானவர்கள். ஆனால், ‘ஒப்பம்’ சொல்ல நினைக்கும் கதை, முக்கிய கதாப்பாத்திரத்தின் பயணம் பற்றியது மட்டுமல்ல; கிராமத்தின் கதை மட்டுமல்ல; தபால் துறையின் நிலவரம் பற்றியது மட்டுமல்ல; இவை மூன்றையும் பிணைத்து யதார்த்தத்தின் ஆழத்தை தோண்ட முற்படும் உண்மைக்கு மிக அருகிலிருந்து வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.  ஐயர்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் இப்படிக் கூறுவார்:

என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் டப்ளின் பற்றியே எழுதுவேன். காரணம், டப்ளினின் இதயத்தைத் தொட்டுவிட்டால் போதும், நான் உலகின் எல்லா நகரங்களின் இதயங்களையும் தொட்டுவிடுவேன். குறிப்பிட்டதை அணுகுவதில் உலகளாவியதை அணுகமுடியும்.

‘ஒப்பம்’ நாவலை எழுதும்போது எனக்கு ஜேம்ஸ் ஜாய்ஸின் வார்த்தைகள்தான் மனதில் தோன்றியது… இந்தியாவில் மொத்தம் 1,50,000க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. உலகின் மிகப்பெரிய வலைப்பின்னலைக் கொண்டுள்ளது, இந்திய அஞ்சல் துறை. இந்திய கிராமங்களின் தகவல் தேவைகளுக்கும் சேமிப்புத் தேவைகளுக்கும், இந்திய நாடு முழுவதும் அது வேரூன்றியுள்ளது. அத்தகு முக்கிய, அதிகாரத்தின் கடைசி நுனியில் இருந்து செயல்படும் கிராம அஞ்சல் அலுவலகத்துக்கும், திருக்கோவிலூரின் மூன்று கிராமங்களுக்கும் இடையில் உள்ள உறவை கதையாக்குவதன் மூலம், உலக மக்களின் கதையை சொல்ல முடியும், சாமானிய மனிதர்களின் வாழ்க்கையையும், யதார்த்தத்தையும் பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.             

‘ஒப்பம்’ நாவலை, எளிய மனிதர்களைக் கொண்டு, எளிமையான விதத்தில் எல்லோருக்குமான கதையாகத்தான் எழுதியுள்ளேன். இருந்தாலும், சில இடங்களில் கதை பல அடுக்குகளாகவும், வலைப்பின்னலாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, முதல் முறையை விட அடுத்தடுத்த வாசிப்புகள் இன்னும் சுவாரசியத்தை உண்டுசெய்யும் என்று நம்புகிறேன்.

வாருங்கள்… கதைக்குள் செல்வோம்!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

38 thoughts on “‘ஒப்பம்’: ஓர் அறிமுகம்”

  1. Pingback: உயிர், உண்மை, உறவு! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  2. Pingback: எம் குரலெங்கே? எம் உணர்வெங்கே? - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  3. Pingback: நான் ஒரு கதைசொல்லி - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  4. Pingback: அவள் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  5. Pingback: நேர்படவும் தலைகீழாயும் இருள் வெளிச்சம் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  6. Pingback: கனவு பேசாமல் பேசும் மவுன மொழி! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  7. Pingback: அபிநய இலாகிரி - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  8. Pingback: அவன் தஸ்தயேவ்ஸ்கி! — மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை.  - உயிர் காகிதம் - எழுத்தும்

  9. Pingback: எட்கர் ஆலன் போ: ஒரு அறிமுகம் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  10. Pingback: 'பல்குரல் உத்தி' கொண்டு யதார்த்தத்தின் ஆழத்தைத் தோண்டும் "கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி"!  - உயிர்

  11. Pingback: எங்கோ போகும் பயணம்... (மொழிபெயர்ப்பு கதை) — 'நாட்சுமே சோசெகி'யின் ஜப்பானிய கதைத் தமிழில். - உயி

  12. Pingback: சேவலும் வெண்முத்தும் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  13. Pingback: இயல்பின் மொழி! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  14. Pingback: மனிதனும் மிருகமும் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  15. Pingback: பச்சையம்மாள் மற்றுமொரு பெண்ணே! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  16. Pingback: தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியம

  17. Pingback: துளித் துளியாய் 'பாதை ரசம்' - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  18. Pingback: யின்-யாங் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  19. Pingback: "கேஸ்ட் அவே (2000)" வில்சனும், இரண்டாம் கருத்தின் அவசியமும்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியம

  20. Pingback: (பிரமி!)ள் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  21. Pingback: லக்கி? - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  22. Pingback: இரவு, நான், ஒரு நீண்ட பயணம்... - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  23. Pingback: பணி நேரம் முடிந்து இரயில் ஏறுவதற்கிடையில்... - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  24. Pingback: ஆழ ஆழத் தோண்டியது காதல்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  25. Pingback: எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுரலில் கேட்கிறது? - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  26. Pingback: ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  27. Pingback: கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  28. Pingback: பழக்கப் படுத்தப்பட்டு வரும் மனிதப் பிராணிகள்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  29. Pingback: நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  30. Pingback: அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  31. Pingback: ஓடாத நதிகளின் மனப்பாங்கு! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  32. Pingback: இரவுப் பிரார்த்தனைகள்... - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  33. Pingback: உப்பும் உருளையுமாய் கவிதை: - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  34. Pingback: அன்பான அட்டைப்பூச்சிக்கு! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  35. Pingback: முதல் பாட்டி! - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  36. Pingback: இலைச் சருகுகள் - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

  37. Pingback: பிழையின்றி எழுதவும் பேசவும், தமிழிலக்கணம் முறைப்படி பயிலவும் சில இலக்கண நூல் பரிந்துரைகள் - உ

  38. Pingback: எது நிதானம்? - உயிர் காகிதம் - எழுத்தும் இலக்கியமும்

Leave a Reply