மனிதனும் மிருகமும்

மனிதர்கள் பல நேரங்களில் மிக கேடாக மாறிப் போகிறார்கள். தங்களுக்கு உள்ளே ஏற்பட்ட வலியைத் தீர்த்துக்கொள்ள முறையானதொரு வழி தேடாமலோ அல்லது தேடியும் கிடைக்காமலோ இருப்பதால், அதே குரூரத்தை சக மனிதர்களிடம் காட்டி, ‘இப்போது புரிகிறதா என் வலி எப்படிப் பட்டது’ என்பது போல் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

உண்மையில் தம் வலியை அப்படியே பிறர் மீது போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போகிறவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் தங்கள் பொறுப்பைத் தொலைத்து விட்டு, தங்களின் நிலையையும் அனுபவத்தையும் மற்றவர்கள் மேல் திணிக்கிறார்கள் என்பதெல்லாம்.

தான் கடி பட்டது பத்தாதென்று, பக்கத்தில் இருப்பவனையும் கடித்து வைத்துவிடுகிறார்கள். அழக் கூச்சப்பட்டுக் கொண்டு, அழுவது பலவீனமென்று நினைத்துக்கொண்டு, மிருகமாகி மற்றவர்களைக் கடித்து வைத்துவிடுகிறார்கள்.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply