எம் குரலெங்கே? எம் உணர்வெங்கே?

புன்முறுவல் ஒன்றுக்கே
வேண்டி நின்றேன் பலகாலம்

உவகைமுகம் ஒன்றுக்கே
ஏங்கி நின்றேன் எந்நாளும்

உம் விழியசையும் இசைவுபடி
ஆடி வந்தேன் இதுகாறும்

எம் மௌனமொழி கலைந்ததுவே
விம்மலென ஆனதுவே

கதறலென  வெடித்ததுவே
கற்சிலையாய் போனதுவே
எம் குரலெங்கே?
அதில் ஒலியெங்கே?
எம் உணர்வெங்கே?
அதில் உயிரெங்கே?

நான் தேடுகின்றேன்;
நித்தம் தேடுகின்றேன்.

எம் குரலெங்கே?
அதில் ஒலியெங்கே?
எம் உணர்வெங்கே?
அதில் உயிரெங்கே?

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply