ஒருவனுடைய கடந்தகாலம்
அவன் நினைவுகளில்
இருக்கிறது.
வரலாறு எங்கிருக்கிறது?
அது
மக்கள் மனதில்
மட்டுமே தான்
இருக்கிறது.
வரலாறு
சில கதைகளாகவும்
புனைவாகவும் மட்டுமே
நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது.
நம்முடைய நேரடித்
தொடர்பில் இருந்து
தள்ளி நிற்கும்
அடுத்தச் சுற்றுவட்டம்
புனைவு தான் –
இவர் சொல்லி அறிவேன்
அவர் சொல்லி அறிவேன்
என்போம்.
அது சரி.
நமக்கான அடையாளத்தை
யார் சொல்லி ஏற்றோம்?
அதில் புனைவேதும்
நிச்சயம் இல்லையா?
சொல்லுங்கள்.
புனைவேதும் இல்லாதவொன்றை
எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா?
புனைவே இல்லாமல்
நான் ஒன்றைச் சொல்கிறேன் —
நான் ஒரு கதைசொல்லி.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
👏👏✨ ஐயமில்லை தாம் ஒரு கதை சொல்லிதான்🌺
😄 நன்றி.