நான் நடக்கும்போது
கூடவே
மிதந்து வருகிறது
நிலா
ஒரு
கருப்பாற்று வெள்ளத்தில்
நீச்சலடித்துக் கொண்டு
வருகிறது
என்னுடைய
வழியில் வெளிச்சமே
இல்லாவிடிலும்,
அந்த நிலவில்
தெரியும் பொட்டு
வெளிச்சத்துக்காக
நடக்கிறேன்
நான்
நானாகவே
மாறிக் கொண்டிருக்கிறேன்
அது
எனக்குள்ளே இருக்கும்
முத்தைக்
கண்டெடுக்க
முத்துக் குளிப்பது போல்
நான்
நானாக மாறுவது
குருடன் பார்க்க
முடியாதக்
காட்சி உலகம் போல்
உலகமே இருட்டாகிவிடுகிறது.
அந்த
இருட்டின்
கருப்பாற்று வெள்ளத்தில்
நீந்திக் கொண்டிருக்கிறது
நிலா
இது
வெறும்
துண்டு நிலா!
முழு நிலா இல்லை.
மீதி நிலா,
நானாக இருப்பதை
உடைக்கச் சொல்கிறது
கண் திறக்கச்
சொல்கிறது
உலகம் தெரியட்டும்
என்கிறது
அந்தத்
துண்டு நிலா
மூழ்காமல் என்னை
மேலிழுக்கிறது
நான்
பின்னோக்கி
நடக்கிறேன்.
ஏதோ சில
முத்துக்கள்
கிடைக்கிறது
முழு நிலா
அகப்படாமல்
நழுவுகிறது
கருப்பாற்று வெள்ளத்தில்
எதிர் நீச்சலில்
ஒரு துண்டும்,
நீர்ப் போக்கில்
இன்னொரு துண்டும்
போய்க் கொண்டே
இருக்கிறது
எழுத்து: ருபீன் பிரவீன்
நாள்: 09-04-2021
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
அருமை தம்பி..
மிக்க மகிழ்ச்சி அண்ணா. நன்றிகள்!