உப்பும் உருளையுமாய் கவிதை:

கவிதை ஒரு உருளை:

கவிதைகளுக்கு உருவம் உண்டு.
அது உருளைப் போல!
உருளுகிறது…
எல்லா உணர்வுகளையும்
உருட்டி
ரொட்டித் தேய்க்கிறது.
உருண்டோடித்
தனக்குத் தோன்றிய
அனைத்திலும்
ஒரு தேய் தேய்க்கிறது!


கவிதையின் உரு தேயவில்லை…
ஆனால்,
கவிதையில் மாட்டிய
மொத்தமும்
தேய்ந்து தட்டையாகிறது!
எல்லா கவிதைகளும்
உருளை இல்லை!
சில மட்டும்
இன்னும் உருவுக்குள்ளே சிக்காமல்
சுதந்திரமாய்…

இந்த உருளைகள்
காலத்தோடு சேர்ந்து மட்டும்
சரியாக உருளுவதில்லை!
காலத்தின் தேவையை
அறியாத
உருமாறா உருளைகளாய்
அவை!

கரிக்கும் கவிதைகள்:

கவிதைகள் செய்யும்
பொங்கலில்
கொஞ்சம் உப்புத் தூக்கல்.
உவர்ப்பின் மிகுதியே
இரசனை மிகுதி ஆகிவிட்டதோ,
ஆக்கப்பட்டதோ!


இதில்
பல உப்புகள் உண்டு.
உப்பு தான் சுவை.
நாகரிக மனிதன்
உப்பு வேண்டுபவன்.
இயற்கை உப்பு போதாமல்
மேல் உப்பு வேறு…
கவிதைகள்
மழையில் ஆரம்பித்தது.
அருவியாய் பொழிந்தது.
ஆறாய்ப் புரண்டது.
கடலோடிணைந்தது.
கவிதைக்கான
ஒரு கால சுழற்சி முடிந்தது.
ஆனால்,
மீண்டும் பெய்யும்
புதுமழை நீரிலும்
பழைய கடல் உப்பு!

உணர்ந்தான்
மனிதன் ஆனான்:
கவிதை உணர்ந்தது,
உணர்த்தியது!
உணர்ச்சியின்
மண்டியில்
மங்கிப் போனான்.

மனிதனும் உருளை –
அவன் கண்ணீரில் உப்பு .
நாகரிக மனிதன்
அதிக உப்பு
வேண்டுபவன்!

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply