நேர்படவும் தலைகீழாயும் இருள் வெளிச்சம்

இருளால் வெளிச்சத்தை அடியோடு துடைத்தெறிய முடிகிறது. வெளிச்சத்தால் இருளை முழுமையாக வென்றெடுக்க முடிவதில்லை. இப்பொழுதும் இதை எழுதும் விரல்களின் நிழல்களில் பின்னோக்கியே நகர்ந்து தொடர்கிறது இருள். நாமும் கூடுதலாக இன்னும் ஓரிரு விளக்குகளால் வெளிச்சத்தைப் பாய்ச்சினோம். என்றாலும் இப்போதும் இருளானது அறையின் மூலைமுடுக்குகளில் சிறுசிறு நிழற் தடங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது. நொடிப் பொழுதில் வந்த வெளிச்சம் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாய் புரட்டிப்போட்டது. மனக்கண்ணால் கொஞ்சம் போல நகர முடிந்தாலும் நம்முடைய நம்பிக்கையே நம்மைத் தட்டுத்தடுமாற வைக்கிறது. எங்கேயும் சிறு துளியும் வெளிச்சமில்லை. வெளிச்சமாய் இருந்த அறைக்குள் திடீரென கும்மிருட்டு. நேர்பட வாசித்தால் வெளிச்சம் உண்டாகிறது. தலைகீழாய் வாசித்தால் எல்லாம் இருளாகிறதே எப்படி ? மீண்டும் வாசித்து பாருங்கள்.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply