அவை காய்ந்த
இலைச் சருகுகள்;
வேண்டப்படாதவை.
அவற்றால் பயனில்லை.
பச்சையம் பழுப்பாகிவிட்டது.
தன் சொந்த மரத்தால்
கைவிடப்பட்ட அனாதைகள்.
காற்று வரும்போதெல்லாம்
அந்த மரம் தாங்கிப் பிடித்தது,
பச்சையத்துக்காய்…
இப்போது அனாதையாய்
காற்றில் அலைக்கழிக்கப்படும்
அந்தச் சருகுகள்…
அந்தச் சருகுகள்
சொல்ல வைத்திருக்கும்
கதைகள் ஏராளம்…
ஆனால், கேட்கத் தான்
ஆளில்லை.
அவை தினம் மண்ணில்
புதைந்து வருகின்றன.
அந்த மரத்தை
ஏக்கத்தோடுப் பார்க்கின்றன.
ஆனால், அந்த மரங்கள்
பொருட்படுத்துவதில்லை.
சருகுகளின் கண்ணீர்
மண்ணில் விழும்
ஈரச் சொட்டுகளாய்…
சருகுகள் நன்றி
வேண்டுவதில்லை.
வெறும் ஏக்கத்தோடுப்
பார்க்கின்றன…
(தள்ளாதக் காலத்தில்
தனக்கெனச் சேமிப்பு
வைத்திருப்பது அவசியம்.)
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)