இங்கே பொருள் மேல்
ஒரு ஈர்ப்பு இருக்கிறது
ஈர்ப்புக்கானக் காரணங்கள்
கலங்கடிக்கும் நியாயங்களாய்…
கலங்கடிக்கும் நியாயங்கள்-
கடந்தகால நினைவுகளாய்
வாழ்ந்துப் பார்த்த வயதோருக்கும்,
வருங்காலக் கனவுகளாய்
வாழ இருக்கும் வயதோருக்கும்.
காரணங்களுக்கு
ஒரு தன்மை இருக்கிறது!
அது வண்ணப் பூச்சுப் போன்றது;
படரும் பொருளைத்
தானாய் மறைத்துக் கொள்ளும்
நியாயங்கள் மறைக்கும்
காரணங்கள் மாயங்களே;
இருந்தும் மலிவாய்த்
திகழும் வேடிக்கைகள்!
பயமும், ஆசையும்
காரணங்களின்
ஒருமுக, பன்முகக்
கூட்டாளிக் கலவைகள்!
காரணங்களின் வளர்ச்சி
மிகவும் அபரீதமானது
பொருளுக்கு உதவாதச்
சிசுவுக்குக்
கருவிலும் கூட இடமில்லை;
அதிவேக உலகத்தின் தேவைக்கு
இந்தச் சிசுக்கள்-
பொருளார்ந்தச் சமுதாயத்தின்
முடங்கள்!
நெருக்கடி உலகின்
காரண வாழ்க்கையில்
கணக்குக்குள் அடங்காத
முயற்சிகள்-
அசிங்கமானவை;
தோல்விக்கானவை.
அவை பொருளின் கணக்குகள்.
“பொருட்செல்வத்தின் கணக்குகளே
கணக்குகளுக்கெல்லாம் தலை!”
பறக்க ஆசைப்படும்
மீன்கள் போல்
பொறுக்க ஆசைப்படும்
நிறையா பொருள்கள்…
அவை பொறுப்பற்ற மனதின்
அடிமனக் கசடுகள்;
எழாமல் தேங்க வேண்டியவை
எழுந்தால்…
கனவு மெய்யாகி
ஒருநாள்
பருந்தின் அலகில் மாட்டிய
மீனாய்ப் பறக்கலாம்…
காரணங்களுக்குக்
காப்பாற்றும் தகுதிக் கிடையாது!
கவிதை: ருபீன் பிரவீண்
நாள்: 24-07-2020
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)