அன்பான அட்டைப்பூச்சிக்கு,
என்னை ஒட்டி மட்டுமே
வாழ விரும்பும்
என் அட்டைப்பூச்சியே!
உன் அன்புக் கடிகளில்
இரத்தம் கொஞ்சம்
வழியாமல் தான் ஊற்றுகிறது!
குறுதி
கால் வழிந்து
வழுக்கும் வரை
என்னைக் கடி!
என் அன்பு அட்டைப்பூச்சியே!
என்னைக்
கடித்துக் கொண்டே இரு…
அப்படியே என்னோடிரு.
கடிப்பது
பெருந் தொல்லையென்பேன்;
அதில் வலி
துளியும் இல்லையென்பேன்!
என் ஆனந்தத் தொல்லையே!
இறுதிவரை
என்னோடு மட்டும்
இரு…
பல கடியும் கடித்தபடி
இரு…
என் செல்ல
அட்டைப்பூச்சியே…
உன் கடிகளில் கிட்டும்
முத்தங்களைத் துறவேன்.
என் காதல் பூச்சியே –
உயிர்வாழ்வின் நீட்சியே!
என்னோடே இரு;
தொடர் தொல்லைக் கொடு.
அவ்வப்போது
இடைவெளி விடு!
விட்ட பின்,
இழுத்து நெறித்துக் கடி!
என் கோபப் பூச்சியே!
என் உயிரை எடு.
என் குருதிக் குடி,
என் குருதிக் குடி!
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)