ஈசோப்பு நீதிக் கதைகள் (Aesop Fables #1)
வயல்வெளியில் சில பெட்டைக்கோழிகளுக்கு மத்தியில் ஒரு சேவல் செருக்குநடைப் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது சட்டென்று சேவலின் கண்கட்கு ஏதோ மின்னுவது தென்பட்டது. ‘ஹொஹோ, மாட்டிக் கொண்டது. அது எனக்குத் தான்’ என்று சேவல் வைக்கோலுக்கு மத்தியிலிருந்து நோண்டி எடுத்தது. என்றோ நிலத்தில் விழுந்து தொலைந்து போயிருந்த வெண்முத்து அது.
‘உன்னை மதித்து வைத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு வேண்டுமானால் நீ புதையலாய் படலாம், எனக்குக் கொத்தித் தொண்டியெடுக்கும் முத்துக்களைக் காட்டிலும் சில சோள மணிகள் ஏக தகும்’ என்றது.
அரியதுக்கு உரியவன் மதிப்பு அறிந்தவன்.
கதைக் குறிப்பு: ஈசோப்பு நீதிக் கதைகள் 620 கி.மு.வில் பிறந்த ஒரு கிரேக்க அடிமை மனிதனால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பிறகு அவை காலப்போக்கில் கதைச்சொல்லிகளுக்கு ஏற்ப அவரவர்கள் கண்ணோட்டத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கதைகளாக மாறிக்கொண்டன. இவையே குறுங்கதை வடிவத்தில் கிடைத்திடும் மிகத் தொன்மையான கதைகள்.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)