அபிநய இலாகிரி

அபிநயக் குயின் பொழிந்த அபிநவம் இனிமாதே
தூலிகை எழில் உடுத்திய காமியம் இனிமாதே

துருஞ்சில் கருப்பாய்க் கூடித் துழாவிய இராவில்
உடும்பாய்த் துவ்வும் “அபிசாரம்” இனிமாதே

கம்பளிப் பந்தம் கடுங்குளிர் வானொடுப் பாடும்
தேம்மதுரம் சொட்டும் பாசுரம் இனிமாதே!

அபிலாசை அகலா திருபுவனம் மேவி
கலாபம் காட்டும் நடராசம் இனிமாதே.

நவ்வியின் துள்ளல் தீராமல் மேலேறும்
போகம் ஆவது நயரூபம் இனிமாதே!

அருஞ்சொற்பொருள்:

இலாகிரி – மது மயக்கம்; மதுபானக் களிப்பு
அபிநயம் – கருத்தை உணர்த்தும் சைகை நடிப்பு
குயின் – மேகம்; செயல்
அபிநவம் – மிகப் புதுமையான
இனிமாதே – இனிய பெண்ணே
தூலிகை – அன்னத்தின் இறகு
எழில் – அழகு
உடுத்திய – அணிந்த
காமியம் – விரும்பும் பொருள்
துருஞ்சில் – வௌவால்
துழாவிய – கிளறு/தடவு/அன்பாகப் பேசு
துவ்வு – அனுபவி
அபிசாரம் – மாந்திரீக வித்தை
தேம்மதுரம் – தேன் இனிமை
பாசுரம் – இசை/புனிதப் பாடல்கள்
அபிலாசை – விருப்பம்
திருபுவனம் – மேலுலகம்
மேவு – அடைதல் செய்/விரும்பு/நேசங்கொள்.
கலாபம் – மயில் தோகை; மாதரின் இடையணி
நடராசம் – நடனக் கடவுள்
நவ்வி – பெண் மான்/ மான் குட்டி/ இளமை/ அழகு
போகம் – அனுபவம்/ இன்பம்
நயரூபம் – அழகுருவம்

பதிவுக்கான சிறப்பு படம்: Pavel Nekoranec

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply