“மீன்களின் விக்கல்கள்” மின்னூல் – ஏன் படிக்க வேண்டும்?

ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும்?

கடல் மழைக்கானத் தேவையைத் தருவது போல, மழை பூமியிலிருந்தே எடுத்து பூமிக்கே நீரைத் தருவது போல, ஒரு புத்தகம் மனித மனதிலிருந்தே எடுத்து மனித மனதிலேயே ஊட்டத்தை ஊட்டுகிறது!
அப்படிப் பட்டதொரு ஆற்றலின் தேவையை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலின் ஒரு முக்கியப் பகுதியை இந்தப் புத்தகத்தைப் படிக்காமலிருந்தால் தொலைத்து விடுவீர்கள்!

இந்தப் புத்தகத்தில் வரும் கவிதைகள் உங்களை உங்களிடமே பேச வைக்கும்.
அந்த சொற்கள் உங்களை அரவணைக்கக் காத்திருக்கின்றன.
உங்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும் பிரதிபலிக்க, அலசிப் பார்க்க, ஆய்ந்து நோக்க, நீங்கள் பார்ப்பதையே வேறு, வேறு கோணங்களில் காட்ட, இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகள் காத்திருக்கின்றன!

ஆற அமர்ந்து, உங்களுக்குப் பிடித்த வேளை ஒன்றில், சிந்தனைகளோடுச் சண்டை போடவும், பேசிக்கொள்ளவும், அன்பு செலுத்தவும் நினைக்கும் ஒரு தருணத்தில் எடுத்து இந்தப் புத்கத்தைப் படியுங்கள்! உங்களின் ஒரு மணி நேரத்தை இந்தப் புத்தகத்திற்குக் கொடுங்கள். உங்களின் ஒரே ஒரு சிந்தனையையேனும் இந்தப் புத்தகம் மாற்றிக் காட்டும்!

உயிர் காகிதம் குழு நண்பர் தங்கைப் பவித்ரா பதில் கொடுத்தால் இப்படியாக இருக்கும்.

Book Cover - Meengalin Vikkalgal.
‘உயிர் காகிதம்’ கவிதைத் தொகுப்பு.
  1. அன்பான அட்டைப்பூச்சிக்கு!
  2. குப்பியுள் அடையும் கவிதை.
  3. இரவுப் பிரார்த்தனைகள்
  4. ஓடாத நதிகளின் மனப்பாங்கு
  5. அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்
  6. லக்கி?
  7. கற்பனை நதியும், கவிதைத் துடுப்பும்
  8. ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!
  9. இரவு, நான், ஒரு நீண்ட இரயில் பயணம்.
  10. எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுறலில் கேட்கிறது?
  11. ஆழ ஆழத் தோண்டியது காதல்
  12. அவள்
  13. தொலைத்தூரக் கனவே!
  14. கனல்
  15. முழுமை
  16. கிலி
  17. மீன்களின் விக்கல்கள்
  18. கனவுலகம்
  19. அபிநய இலாகிரி
  20. இன்மை முதல் இன்மை வரை
  21. காய்ந்த இலைச் சருகுகள்.
  22. யின்-யாங்

இப்படி மொத்தம் இருபத்தி இரண்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, யதார்த்தக் காதலின் அழகையும், காதலின் இம்சைகள் தாண்டிய உள நெருக்கத்தையும், கவிதைக்கானச் சுதந்திரத்தையும், வாழ்வின் வெற்றுத் தன்மையையும், முதுமையில் பிள்ளைகளால் ஒதுக்கப்படும் வயதானப் பெற்றோரின் மனநிலையையும், கனவுகளில் படிந்த நுண்ணுணர்வுகளின் மௌனத்தை அகற்றியும், மென்சோகத்தோடும், தனிமையில் இரவோடு ஆடும் உறவையும், குழந்தை மனதின் பயத்தையும் ஏக்கத்தையும், பிரவாகமாய் வழியும் அடங்காத உணர்வுகளையும் எளிய சொல்லோடு மனதுக்கு நெருக்கமாகப் பேசுகிறது.

நூலின் இலவச மாதிரியை 20% வரைப் படித்துப் பார்த்து வாங்க கூகுள் ப்ளே புக்ஸ் அனுமதிக்கிறது. மாதிரியைப் படித்துப் பார்க்க இங்கு அழுத்தவும்.

கூகுள் ப்ளே புக்ஸ்– இல் நூலைப் பெற அதன் நீல வார்த்தைகளைத் தொடவும்.
அமேசான் கிண்டில் -இல் நூலைப் பெற அதன் நீல வார்த்தைகளைத் தொடவும்.

Leave a Reply