அறிமுகம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
-கணியன் பூங்குன்றனார்

இந்தப் பக்கம் முற்றிலும் தமிழ் எழுத்துக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் தேர்ந்தெடுத்தத் தமிழ் படைப்புகளை மட்டும் பகிர இருக்கிறேன்.

கவிதைகள், கட்டுரைகள், கதைகள், புத்தக விமர்சனங்கள் போன்று பல்வேறு பரிமாணங்களில் எழுத்துக்கள் இங்கே பகிரப்படும்.

இந்தத் தளம் இயங்கி வருவது ஒரு நபரின் எழுத்து உழைப்பில் தான். மேலும், எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் துணைப் புரியும் விதமாக இந்தத் தளத்தை வளர்த்து வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பாலமாக்கிடும் எண்ணத்தில் இயங்கி வருகிறேன். விரைவில் நடந்தேற விரும்புகிறேன்.

இந்தத் தளத்தின் ஆசிரியராகிய நான் கீழ்வரும் வரிகளில் என்னைப் பற்றியும் அறிமுகம் தருகிறேன்.

நான் ருபீன் பிரவீண். ‘ஒப்பம்’ நாவலின் ஆசிரியர். ‘மீன்களின் விக்கல்கள்’ கவிதைத் தொகுப்பையும் மின்னூலாக வெளியிட்டுள்ளேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் இணையத்தளம் துவங்கி நடத்தி வருகிறேன். எழுத்தை மையம் கொண்டே இரு தளங்களும் இயங்கி வருகின்றன. ஆங்கில வலைத்தளம் காண்க.

தொடர்புக்கு:

இ-மெயில்: rubywriter24@gmail.com
இன்ஸ்டாகிராம் தொடர்பு
ஃபேஸ்புக் தொடர்பு

2 thoughts on “அறிமுகம்”

Leave a Reply